Home சினிமாமீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது எனது வரம் :

மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது எனது வரம் :

by admin


அஜித்துடன் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ள நிலையில், மீண்டும் ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைந்தால் அது எனது வரம் என்று  இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்துடன் சிவா இணைந்து வீரம்,வேதாளம்,விவேகம், விஸ்வாசம்  முதலிய நான்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். விஸ்வாசம், திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சிவா, அண்மையில்  இடம்பெற்ற  நேர்காணலில்,  அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அஜித், ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதில், மகிழ்ச்சியடைவதாகவும்  ஐந்தாவது முறையாக மேலும் ஒரு படத்தில் இணைந்தால், அது வரம் என்றும் பதில் அளித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More