சமஸ்டி என்றால் என்னவென்று தெரியாதவர்களே பிரிவினை வாதத்தை தூண்டிவருகின்றனர் எனவும் அவர்களால் பிரிவினைவாத பிரசாரம் இல்லாமல் அரசியல் செய்யமுடியாது எனவும் ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகார பகிர்வு இடம்பெறும் எனவும் சுகாதார மற்றும் போசணை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு செல்லவேண்டும் என தெரிவித்து வருவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு செல்லவேண்டுமெனில் பரராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும் அவ்வாறில்லாமல் அவர்களது தேவைக்காக தேர்தலை நடத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.