வட மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்த நிலையில் வட மாகாண ஆளுநராக மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
அத்துடன் முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்தின, கலாநிதி விக்கினேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமள் ஆகியோரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இன்றையதினம் மீதமுள்ள 4 மாகாணங்களுக்குமான நியமனங்கள் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது