173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து 118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு சென்ற கடற்படையினர் குறித்த கஞ்சா போதை பொருளை மீட்டனர்.
கடற்படையினரால் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளை கடற்படையினர் வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ள காவல்துறையினர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love