ஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நில நடுக்கத்க்கு பின்னர் தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக அதிகளவான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.