இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிப் பிரச்சினைகளுக்கு சர்வதேச நீதிமன்றம் தேவை என வடக்கு கிழக்கில் வலியுறுத்தப்படுவதாகவும், ஆனால் இலங்கைக்குள் சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கில் பிரச்சினைகள் இடம்பெற்றமை உண்மை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் அதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவை என்று கோரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிடுள்ளார்.
இன்றைய அமர்வில் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினரிடையே, விவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த பிமல், இன்று இலங்கை பிரச்சினையை இலங்கையில் தீர்த்துக்கொள்ள முடியும் என்பது நிரூபனமாகியுள்ளதாகவும் சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.