Home இலங்கைஜனாதிபதி தேர்தலில் மைத்திரி அல்லது கோத்தபாயவே வேட்பாளர்:

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி அல்லது கோத்தபாயவே வேட்பாளர்:

by admin

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மேற்படி இருவரில் ஒருவரையே தமது கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் ஒன்றை நடாத்தி அதிகாரத்தை கைப்பற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராகவிருப்பதாக இருப்பதாகவும்  முதல் வாய்ப்பிலேயே அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More