தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் – சுரேஸ்
தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மோசமான அடக்குமுறைக்குள் , மாநாட்டுக்கு வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த போது யாழ்ப்பாணத்தில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு அது கோலாகலமாக நடைபெற்றது.
அதனை இலங்கை அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலே விழாவின் கடைசி நாள் அன்று பொலிசார் தேவையற்ற விதத்தில் அதற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அவ்வாறான இந்த வெறுமன நினைவு நாள் மாத்திரமல்ல. தமிழர்கள் மீதான அடக்கு முறையின் நாள். இந்த அடக்குமுறைகள் படுகொலையின் பின்னாளில் ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றன. இந்த ஒன்பது பேரின் படுகொலை ஆயுத போராட்டம் தோற்றம் பெற காரணமனதில் ஒன்று. இந்த படுகொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரியை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட வன்முறை பின்னர் ஆயுத போராட்டமாக மற்றம் பெற்றது.
தமிழர்கள் மீதான அடக்கு முறைகளில் ஒன்றான இந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் மக்கள் அடக்கப்பட்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆயுத போராட்டத்தில் பலர் உயிர் தியாகம் செய்தும் பலர் படுகொலைகள் செய்யப்பட்டும் உள்ள நிலையில் கூட தற்போது உள்ள அரசாங்கம் சமஸ்டியை நிராகரிக்கும் போக்கும், பௌத்தத்திற்கு முதலிடம் எனும் போக்கிலையே உள்ளது.
எமது மக்கள் மத்தியில் பல்வேறு படுகொலைகள் நடைபெற்று உள்ளது இதனை நாம் அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்ல வேண்டும். இந்த நினைவேந்தல்கள் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பெற்று கொள்வதற்கு ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் என தெரிவித்தார்
இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது – அனந்தி சசிதரன்
இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எங்கள் இனத்தின் மீதான படுகொலைகளின் நினைவேந்தல்களை அனுஸ்டிக்க தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் ஒன்றோ ஒரு நாள் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பி அதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அதற்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களுக்கு ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன. ஜனநாயக உரிமையை அனுபவிப்பவர்களாக தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றார்கள்.
இவ்வாறான நினைவேந்தல்கள் ஊடாகவே எமக்கு அடுத்து வரும் சந்ததிகள் நாம் எவ்வாறான அடக்கு முறைக்குள் வாழ்ந்தோம் எதனால் ஆயுத போராட்டம் ஆரம்பமானது எனும் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். என மேலும் தெரிவித்தார்.
ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர் – சி. தவராசா
ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர் என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசின் அடாவடி தனத்தினால், அதன் ஏவலில் நடைபெற்ற படுகொலையே இப்படுகொலையாகும். ஆயுத போராட்டத்தின் வரலாறு எழுச்சி கொண்ட சந்தர்ப்பங்களில் ஒன்றாக இந்த படுகொலை அமைந்திருந்தது.
உரும்பிராய் பொன். சிவகுமாரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பில் தொண்டர்களாக செயற்பட்டவர்கள். இந்த படுகொலையை நேரில் கண்டு பொறுக்கமுடியாது, இந்த இடத்தில் சபதம் எடுத்தார்கள் இதற்கு காரணமான அதிகாரிகளை பழிவாங்குவேன் என அவரின் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் அவரும் மரணத்தை பின்னாளில் தழுவிக்கொண்டார்.
இவ்வாறாக ஆயுத போராட்டம் எழுச்சி பெற உந்து காரணியாக இருந்தது இந்த படுகொலை இன்று ஆயுத போராட்டம் மௌனிக்கபப்ட்ட நிலையிலும் எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது.
ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் ஆயுதங்களால் இந்த உலகத்தை அடக்கி ஆண்டார்கள் என சொன்னார்கள். ஆனால் இன்று ஆயுதம் இல்லாமல் வேறு விதமாக அடக்கி ஆளுகின்றார்கள்.
அதேபோல இன்று எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசு ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து எங்கள் உரிமைகளை அடக்குகின்றன
இந்த நிலையில் இருந்து மீட்சி பெற வேண்டும் ஆயின் இன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி எம்மை மாற்றி எமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.