இலங்கை பிரதான செய்திகள்

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் – பிரதியமைச்சர் பதவிப்பிரமாணம் :

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்களாக ரவீந்திர சமவீர – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராகவும்  வி.ராதாகிருஷ்ணன் விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சராகவும் அப்துல்லாஹ் மஹ்ரூப் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

இதனிடையே அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link