189
வலி.தென்மேற்கு பிரதேசத்தின் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதிமயானக் காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து மயானத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.
குறித்த மயானக் காணியின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் பல வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையைக் கோரியிருந்த நிலையிலேயே இராணுவம் கடந்தவாரம் மயானத்தை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love