குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டி மக்களின் பங்களிப்புடன் கண்டி மாவட்ட செயலகம் 15 லட்சம் பெறுமதியான பாடசாலை பொதிகள் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகங்கள் ஊடாக உதவிக்கரம் நீட்டும் நோக்குடன் இன்று கண்டி மாவட்ட செயலகத்தினால் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.
கண்டி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் குறித்த பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொருட்களே இவ்வாறு இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
Spread the love
Add Comment