204
இயக்குனர் அட்லி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கதிர் இணைந்து நடிக்கவுள்ளார். விஜய்யின் 36ஆவது திரைப்படத்தையுட் அட்லி இயக்குகின்றார்.
இந்தத் திரைப்படத்தில் விஜயிற்கு நாயகியாக நயன்தாரா நடிக்கின்றார். அத்துடன் விவேக், யோகி பாபுவும் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி பெயரிடப்படாத இந்தப் படம் உருவாக்கப்படுகின்றது.
பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார்.
எதிர்வரும் 20ஆம் திகதி படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
Spread the love