இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச் சந்திப்பு கடந்த நான்காம் திகதி சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குரிய சுகாதார நடவடிக்கை தொடர்பிலேயே சங்கக்காரவுடன் சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சர் ராஜித தெரிவித்திருப்பதாகவும் அவ் ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் இச் சந்திப்பு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய தேசிய முன்னனணியின் ஜனாதிபதி வேட்பாளராக சங்கக்காரவை தேர்தலில் போட்டியிடச் செய்யவே இந்தப் பேச்சு வார்த்தை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.