Home இந்தியா காஷ்மீரில் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொலை

by admin

ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற என்கவுண்டரில் அல் பதர் தீவிரவாத இயக்கத்தின் தளபதி உள்ளிட்ட 2 ; தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு குல்காம் மாவட்டம் கத்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததனையடுத்து நேற்று மாலை குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தொவிக்கப்பட்டுள்ளது.

அல் பதர் இயக்கத்தின் முக்கிய தளபதியான ஜீனத்துல் இஸ்லாம் மற்றும் ஷகீல் தார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு பயங்கரவாத குற்றச்செயல்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More