183
கடந்த 4 வருடங்களாக சுகாதார அமைச்சுக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவினை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இது குறித்து தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்
Spread the love