பொதுநலவாய விசாரணை தீர்ப்பாய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு இந்திய மத்திய அரசின் நியமனத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . லண்டனை தலைமையிடமாக கொண்டியங்கும் பொதுநலவாய விசாரணை தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை அவரின் சம்மதத்துடன் மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.
எனினும் மத்திய அரசுக்கு தான் வழங்கிய சம்மதத்தை மீளப் பெறுவதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி நேற்றையதினம் அறிவ்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இந்த தீர்ப்பாயத்தில் பங்கேற்கவேண்டி இருக்கும் என்பதால் தற்போது நீதிபதி தனது விருப்பத்தை மீளப்பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.கே.சிக்ரி உச்சநீதிமன்றின் 2-வது சிரேஸ்ட நீதிபதி என்பதும், எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதிp அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.