அலுவலக நேரத்துக்கு பின்னர் அலுவலகத்துடன் தொடர்பின்றி இருப்பதற்கான உரிமை அளிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவினை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுப்ரியா சுலே தாக்கல் செய்துள்ளார்.
இந்த மசோதா, சட்டமாக நிறைவேறினால், அலுவலக நேரத்துக்கு பின்னர் ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் இருந்து வரும், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மூலமான கேள்விகள் போன்றவற்றுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம், ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் எனவும் இந்த மசோதா, 10 ஊழியர்களுக்கு அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமானால், அலுவலக நேரத்துக்கு பின் வரும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றிற்கு பதில் அளிக்காத ஊழியர்களுக்கு எதிராக, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.