162
இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (15.01.19) பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராட சென்ற நிலையில், குளித்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறிய போது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 18 இற்கும் 20 வயதிற்கும் உட்பட இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு இளைஞனுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Spread the love