219
விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னோட்டம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் `கடாரம் கொண்டான்’ இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னமும் ஒரு பாடல் மாத்திரமே படப்பிடிப்பு செய்யப்படவேண்டும் என்று படக்குழு அண்மையில் கூறியது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டம் ஹொலிவுட் திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி முதலியோரும் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். இத் திரைப்படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
Spread the love