Home சினிமா இந்தியன்- 2 முதல் புகைப்படம் (பர்ஸ்ட் லுக்) வெளியீடு :

இந்தியன்- 2 முதல் புகைப்படம் (பர்ஸ்ட் லுக்) வெளியீடு :

by admin


இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் புகைப்படம்  (பர்ஸ்ட் லுக்) புகைப்படம் வெளியாகியுள்ளது.

1996இல் கமல்ஹாசன் நடிக்க, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். தந்தை, மகன் என இரு வேறு பட்ட கதாபாத்திரங்களில் இப் படத்தில் கமல் நடித்தார். இலஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வரையில் இப் படம் புகழ் பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கமலும் சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக  காஜல் அகர்வால்  நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேனாபதி, சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் ஒருவராக வரும் கமல்ஹாசனின் கதாபாத்திரத்துக்கான ஒப்பனை பரீட்சிப்பு முடிந்து படக்குழுவினருக்கு திருப்திகரமாக அமைந்துள்ளது.

இந்தியன் 2 படத்தில் வயது முதிர்ந்த சேனாபதி கதாபாத்திரத்தில்,  வர்மக்கலை முத்திரையான இருவிரல் கோபத்துடன் முகம் காட்டும் முதல் புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது. இப் படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More