இலங்கை பிரதான செய்திகள்

படையினரின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் முல்லைத்தீவு மாவட்ட படையினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59,64,68 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த படைத்தளபதிகள் இதில் கலந்து கொண்டு சிவன் ஆலயத்தில் வழிபாட்டினை மேற்கொண்டு பொது மக்களுக்கான சிற்றுண்டிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற பழம்பாசி அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை மாணவி ஆர்.துச்சாதனாக்கு படையரினரின் ஏற்பாட்டில் 25 ஆயிரம் ரூபா காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.