171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனக்கு தானே தீ மூட்டினார் என எரிகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.தாவடி தெற்கை சேர்ந்த 64 வயதான வீரசிங்கம் கனகதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் பிள்ளைகள் இன்றி தனியாக வசித்து வந்ததாகவும் , அந்நிலையில் நேற்று புதன்கிழமை தனக்கு தானே தீமூட்டி கொண்டார் எனவும் , அதனை அவதானித்த தாம் தீயினை அணைத்து வயோதிபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
Spread the love