163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பலாலி இராணுவ முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து இராணுவ சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 22 வயதான ஆரியரத்னா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிப்பாய் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பலாலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love