Home இலங்கைவெட்டுக்குழு தாக்கியதில் இளைஞர் படுகாயம்

வெட்டுக்குழு தாக்கியதில் இளைஞர் படுகாயம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட நண்பன் வீட்டுக்கு சென்ற இளைஞன் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எழுதுமட்டுவாழ் தெற்கை சேர்ந்த 20 வயதான ஆனந்தராசா லக்கிகன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து பொங்கல் தினத்தன்று மீசாலை கிழக்கு அல்லாரை தம்ப தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன் போது ஏழு மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக்குள் புகுந்து இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

அதில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதேவேளை பொங்கல் தினத்தன்று யாழ்.நாச்சிமார் கோவலடியில் நின்ற இளைஞர்கள் மீதும் வாள் வெட்டுக் குழு தாக்குதலை மேற்கொண்டதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒரு இளைஞனின் கை விரல்கள் துண்டாடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More