இதுவரை ஆண்கள் மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட புனித மலையாக கருதப்படும் கேரள மாநிலத்திலுள்ள அகஸ்தியகூடத்தில் முதல்முறையாக பெண்ணொருவர் ஏறியுள்ளார். கடந்த ஆண்டு நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினால் இது சாத்தியமாகியுள்ளது, 38 வயதான சனால் என்னும் பெண்ணே இவ்வாறு அகஸ்தியகூடத்தில் முதல்முறையாக ஏறியுள்ளார்.
பிரம்மசாரியான இந்து முனிவரின் சிலை அங்கு இருப்பதால், இந்த மலையில் பெண்கள் ஏறக்கூடாது என அங்குள்ள பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். எனினும் உள்ளூர்வாசிகளோ, போராட்டக்காரர்களோ இந்த மலையில் ஏறும்போது தன்னை தடுக்கவில்லை என அகஸ்தியகூடத்தில் ஏறிய சனால் தெரிவித்துள்ளார் இந்த மலையில் ஏறுவதில் இருந்த பாலின பாகுபாடு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்’படுகின்றமை குறிப்பிடத்தக்கது