157
ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷாவுடன் ஏற்பட்ட தனது காதல் குறித்து நடிகர் விஷால் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இருவருக்கும் இடையில் விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணமாக இருந்தபோதும் இரு வீட்டுக் குடும்பத்தின் சம்மதத்துடன் விரைவில் ஜைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் இடம்பெறவுள்ளது.
ஐதராபாத்தில் வசிக்கும் அனிஷா, பிரபல தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சரிதா தம்பதியின் மகள். இவர் ‘அர்ஜூன் ரெட்டி’, ‘பெல்லி சூப்லு’ முதலிய தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதேவேளை அனிஷா இந்திய தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கணை என்றும் கூறப்படுகின்றது.
விசாகப்பட்டினத்தில் ‘அயோத்யா’ படப்பிடிப்பின்போது, பெண்கள் மட்டுமே பணியாற்றும் ‘ஆல் அபவுட் மிச்செலோ’ ஆங்கில படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனிஷாவை சந்தித்தாக விஷால் கூறினார்.
அவ்வாறு ஏற்பட்ட சந்திப்பு காதலாக மாறியதாகவும் தற்போது தாம் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாகவும் கூறிய விஷால், திருமணத்தின் பின்னரும் அனிஷா நடிப்பார் என்றும் அவருடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love