சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கின்றது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கடந்த வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதனையடுத்து அதனை அமுல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வரும் அதேவேளை அதற்கெதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட்ட நிலையில் இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ள நிலையில் ஒருவர் தனது வீட்டுக்கு சென்ற போது உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கருதி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவில், அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், தமக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எனவும் கோரியிருந்தனர். இந்தநிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.