சீனாவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பவராக அறியப்பட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்கு அவர் தலைவராக இருந்த கிராமத்தில் இருந்த சுமார் 20 வீதமான குடும்பங்கள் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு போதைப் பொருள் தொழிலில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பாதுகாப்பு அளித்த சாய் டோங்ஜியா எனும் குறித்த நபரை ,அந்த கிராமத்தின் கோட் பாதர் சீன ஊடகங்கள், வர்ணித்துள்ளன.டிசம்பர் 2013இல் நடைபெற்ற ஒரு சோதனையின்போது சாய் டோங்ஜியா கைது செய்யப்பட்டிருந்தார். சுமார் 3,000க்கும் அதிகமான காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது 180 பேரை கைது செய்த காவல் துறையினர், சுமார் 3,000 கிலோ கிரிஸ்டல் மெத் என்ற போதைப் பொருளையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை லஞ்சம் கொடுத்து விடுதலை செய்யவும் இவர் முயற்சித்துள்ளார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது