Home இந்தியாசிபிஐ சிறப்பு இயக்குனர் பதவி நீக்கம்

சிபிஐ சிறப்பு இயக்குனர் பதவி நீக்கம்

by admin


சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். . இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினையடுத்து அலோக் வர்மா கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார் எனினும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்ற அலோக் வர்மாவை மத்திய அரசு தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமித்ததால், அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.

இதேபோன்று ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, அவரது அதிகாரங்களும் பறிக்கப்பட்டநிலையில், நேற்று திடீரென சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  அத்துடன் மேலும் 3 அதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் மத்தியஅரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More