ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து விபத்துக்குள்ளானதில், சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது சுரங்க விபத்து இதுவாகும். இதே மாகாணத்தில் கடந்த 4-ம் திகதி ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான சுரங்கங்கள் மிகவும் பழமையானவை என்பதுடன் அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால், அடிக்கடி இவ்வாறு விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.