எதிர்வரும் தேர்தல்களின் போது பொதுஜன பெரமுன முன்னணி கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கட்சியின் உள்ளக ஜனநாயகத்தை மதிப்பதுடன் சகோதர கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே பொதுஜன பெரமுன முன்னணியின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை மனுவினை நேற்றையதினம் உள்ளுராட்சி மன்றங்கள் அமைப்பின் தலைவர் உதேனி அதுகோரல முன்வைத்த போதே பசில் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் அனைத்தும் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ஸவினால் பரிசீலனை செய்யப்பட்டு கட்சியின் முக்கியத் தரப்பினருடன் ஒன்றிணைந்து சரியான தீர்மானம் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.