பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கெதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கெதிரான யுத்தம் மனித உரிமை பேரழிவு என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்சுக்கான ஆராய்ச்சியாளர் கார்லொஸ் கொன்டே, உலகின் எந்த நாடும் இதனை பின்பற்றக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்தை வெறுமனே குற்றச்செயலாக மாத்திரம் கருதி முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருளுக்கெதிரான யுத்தங்களால் தீர்வை காணமுடியவில்லை எனவும் மாறாக சொல்லொண துயரத்தையும், சட்டத்தின் ஆட்சியின் அழிவையும் மனித உரிமைகளில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.