சவூதி அரேபியாவில் மற்றுமொரு பெண் ஒருவர் தன் குடும்பத்திடம் இருந்து தன்னைப் பாதுகாக்கும்படி சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளார். நோஜத் அல் மண்டில் என்ற இந்தப் பெண் தனது குடும்பத்தினர் தன்னைத் துன்புறுத்துவதாகவும் தன்னை குடும்பத்தாரிடமிருந்து காக்குமாறும் ட்விட்டர் மூலமாக உதவி கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சவூதியை விட்டு இன்னும் வெளியேறவில்லை என்பதுடன் தன்னைப் பற்றி எந்த அடையாளத்தையும் வெளியிடவில்லை என்பதுடன் இதனை காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நோஜத்தின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும் என சவூதிப் பெண்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னர் 18 வயதான ரஹாப் மொகமது அல் குனான் என்பவர் தனது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறி தப்பி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கனடா அடைக்கலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.