குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் சனிக்கிழமை வீட்டினை சோதனையிட்ட போது , இரண்டு கைத்துப்பாக்கி , ஒரு கட்டத்துவக்கு மற்றும் 150 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாகவும் , அதனுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் வீட்டில் பெற்றோருடன் வசித்து வைத்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர்; விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞர் கைது
Jan 20, 2019 @ 04:16
கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் , அதனுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் வீட்டில் இருந்த இளைஞன். ஒருவரையும் கைது செய்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட இளைஞனை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.