197
நடிகை வரலட்சுமி சரத்குமார் மாறுபட்ட முக்கியத்துவமான வேடங்களில் நடித்து கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
தற்போது அதிகமான திரைப்படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று நிற்காமல், பல்வேறு முக்கியத்துவமான வேடங்களில் தனது மாறுபட்ட நடிப்பின் வாயிலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சர்கார், சண்டைககோழி 2, மாரி 2 படங்களில் முக்கிய வேடங்களிலும் நீயா 2, காட்டேரி படங்களிலும் 2 ஆம் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அத்துடன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெல்வெட் நகரம், சக்தி, ராஜபார்வை, டேனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கன்னிராசி அடுத்து, வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தெலுங்கிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.,பிஎல் என்ற தெலுங்கு படத்தில், சந்தீப் கிஷனுக்கு நாயகியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். அதில், வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப்போகிறார். தொடர்ந்து தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கவும் வரலட்சுமி திட்டமிட்டு உள்ளார்.
Spread the love