Home சினிமா இந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்

இந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்

by admin

இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக  அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஜினி நடித்த 2’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்த அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

1996இல் கமல்ஹாசன் நடிக்க, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். தந்தை, மகன் என இரு வேறு பட்ட கதாபாத்திரங்களில் இப் படத்தில் கமல் நடித்தார். இலஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வரையில் இப் படம் புகழ் பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கமலும் சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக  காஜல் அகர்வால்  நடிக்கின்றார்.


இதேவேளை இத் திரைப்படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தாய்வானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தாய்வான் காட்சிகளில் பே சூஸி நடிக்கின்றார்.

வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அக்‌ஷய் குமாரிடம் பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது. எனினும் அவர் இன்னமும் தனது பதிலை தெரிவிக்கவில்லை என்றும் படத்தில் நடிப்பதற்கு, படக்குழு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More