Home இலங்கை கொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…

கொலை மிரட்டல் – பிரிகேடியர் பிரியங்க – வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் – தீர்பும் பிடியாணையும்…

by admin


லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நேற்று  நடைபெற்ற இறுதிக்கட்ட வழக்கில் அவருக்கு எதிரான இரு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு பொது ஒழுங்குகள் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பிரிவு 4 ஏ மற்றும் பிரிவு 5 சட்ட விதிகளுக்கு அமைவாக பிரியங்கா பெர்ணான்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அவர்மீது பிடியாணை உத்தரவையும் நீதிபதிகள் குழு பிறப்பித்துள்ளனர்.

இந்த உத்தரவு பிரித்தானியாவின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த அதிகாரி பிரித்தானியாவிற்கும் பிரவேசிக்கும் எச்சர்ந்தப்பங்களிலும் கைதுசெய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களின் வழிநடத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் ICPPG அமைப்பு தாக்கல் செய்த குறித்த குற்றவியல் வழக்கு வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியினை ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடிவருவதுடன் இதேபோல் யுத்தக்குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றங்களில் தண்டிக்கப்படவேண்டும் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவுசெய்தும் வருகின்றனர்.

லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பிழல் ICPPG அமைப்பு தாக்கல் செய்த வழக்கின் இறுதி வழக்கு இன்று வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.

குற்றச்சாட்டுக்குள்ளான பிரியங்கா பெர்ணான்டோவுக்கு மூன்றாம் கட்ட வழக்கின் போது நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்த நிலையில் இன்றைய இறுதிக்கட்ட வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் காலை 11.00 மணியளவின் நீதிமன்றின் 8 ஆம் இலக்க அறையில் மூன்று விசேட நீதிபதிகள் குழு முன்னிலையில் பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான இறுதிக்கட்ட வழுக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.

பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் மயூரன் சதானந்தன், கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி, வினோத் பிரியந்த ஆகியோரும் முக்கிய சாட்சிகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் குறித்த வீடியோவினை பதிவு செய்த சபேஷ்ராஜ் சத்தியமூர்த்தி ஆகியோரும் மன்றில் ஆயராகி இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவரான பிரியங்கா பெர்ணான்டோ குறித்த வழக்கில் சமூகமளிக்கவேண்டுமென ஏற்கனவே நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் அவரோ அல்லது அவர் தரப்பிலிருந்து எவரும் இன்று நீதிமன்றில் சமூகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் Public Interest Law Centre என்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த Paul Heron மற்றும் Helen Mowat ஆகியோர் தமது தரப்பு வாதங்களை நீதிபதிகள் குழுவின் முன் சமர்ப்பித்ததுடன் குறித்த சர்ச்சைக்குரிய காணொளியும் நீதிபதிகளிற்கு காண்பிக்கப்பட்டது.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களில் இரு குற்றச்சாட்டுக்கள் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவர் குற்றவாளி என மன்று அறிவித்தது. அதேவேளை குற்றச்சாட்டுக்களின் அடிப்;படையில் அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த பிடி உத்தரவு பிரித்தானியாவின் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் அனுப்பிவைக்கப்படும் என மன்றினால் அறிவிக்கப்பட்டதுடன் அவர் பிரித்தானியாவில் பிரவேசிக்கும் எச்சர்ந்தப்பத்திலும் கைதுசெய்யப்பட்டு மன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை குற்றவாளியான பிரியங்கா பெர்ணான்டோ யுத்தக்குற்றங்களை இழைத்தவர் என்பதினை நீதிமன்றில் பத்திரங்களில் ICPPG யினால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் அது பற்றிய வழக்கு இன்று நடைபெறவில்லை. ஆனாலும் அவர் யுத்தக்குற்றங்களை இழைத்தவர் என்பதனை இன்றை வழக்கு விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னணி
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின் போது (2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி) லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் பிரித்தானியா வாழ் தமிழர்களால் பாரிய எதிர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

இதன் போது தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியான பிரியங்கா பெர்ணான்டோ தூரகத்திற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை தனது தொலைபேசியில் படம் பிடித்ததுடன் அவர்களைப்பார்த்து கழுத்ததை வெட்டுவேன் என்ற சமிக்ஞையுடனான கொலை அச்சுறுத்தலும் விடுத் திருந்தார்.

குறித்த காணொளி ஊடகங்கள் மற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உலகத்தமிழரிடையேயும் சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தஇ இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த அதிகாரியை பணிநிறுத்தம் செய்தது. எனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அவரது பணிநீக்கம் இரத்து செய்யப்பட்டு தொடர்ந்தும் பணியில் அமர்த்தப்பட்டார்.

இதனையடுத்து கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரியை பிரித்தானிய பொலிஸார் கைது செய்ய வேண்டுமெனகோரி லண்டனில் உள்ள பொதுநலவாய அலுவலகத்திற்குமுன்னாள் ஒட்டுமொத்த லண்டன் வாழ் தமிழர்களும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

அதேவேளைஇ குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து பிரியங்கா பெர்ணான்டோ இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.

எனினும் கொலைமிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி லண்டனுக்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்படவேண்டுமென பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்று நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றை இன்றைய இறுதி வழக்கில் யுத்தக்குற்றவாளியான பிரியங்கா பெர்ணான்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பிடியாரணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகிர்தன்-

கழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி!!! வெஸ்ஸ்ட்மின்ஸ்றர் நீதிமன்றம் தீரப்பு!!!

Jan 21, 2019 @ 14:41


லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்று சைகை செய்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்று லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரதினத்தின்போது லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை பார்த்து கழுத்தை அறுப்பேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை காட்டினார்.

இது தொடர்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு இன்று (21.01.19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இரண்டில், அவர் குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவோ அல்லது பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இருந்தோ எவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் பிணையற்ற பிடியாணை வழங்கி லண்டன் வெஸ்ஸ்ட்மின்ஸ்றர் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More