169
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ இன்றையதினம் கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையிலேயே அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love