172
இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை ; சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ; சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையில் சிக்கி 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love