மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதற்காக நாளை புதன் கிழமை காலை கொழும்பிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். குறித்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை(22) காலை 134 ஆவது தடவையாக இடம் பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து நாளை கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவின் புளோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இது வரை குறித்த அகழ்வு பணிகளின் போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மனித எலும்புக்கூடுகள் கொழும்பு ஊடாக அமெரிக்கா பயணம்…
170
Spread the love
previous post