Home இலங்கைபாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…

பாதுகாப்புச் செயலாளர் புலம்பெயர் அமைப்புக்களுக்கு சவால்…

by admin


பாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால், அதனை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ புலம்பெயர் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இந்த நாட்டில் நிறைய பேர் இராணுவம் என்பதை தவறான அர்த்தத்துடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ வீரர் ஒருவர், இராணுவத்திலிருந்து விலகி ஒருவரை கொலை செய்தால் அவரை நாம் இராணுவ வீரர் என்று கூறமுடியாது. அவர் ஒரு கொலைக்குற்றவாளியாகவே அடையாளப்படுத்தப்படுவார்.

அவருக்கு சட்டத்திட்டத்துக்கு இணங்க, கொலைக் குற்றத்துக்கான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அந்தவகையில், இன்னும் இரண்டு வாரங்களில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இனிமேல் புலம்பெயர் அமைப்பினர் இராணுவத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தமுடியாது.  “நாம் புலம்பெயர் அமைப்பினருக்கு சவால் விடுக்கிறோம்.  முடிந்தால் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்களை வழங்குங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More