இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் – காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இந்தியன் 2 திரைப்படத்தின் பூசை நடாத்தப்பட்டு படப்பிடி்பபு நடைபெற்று வருகின்றது.
கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல மணிநேரம் ஒப்பனையிடப்பட்டு கமல் நடிக்கின்றார். இதேவேளை சிம்பு நடிக்கத் தீரமானித்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாகவும், அவருக்கு நாயகியாக காஜல் நடிக்கின்றார்.
அத்துடன் வில்லனாக அபிஷேக் பச்சனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வில்லன் கதாபாத்திரத்திற்கு அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அக்ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அக்ஷய் குமார் சில நிபந்தனைகளை விதித்தமையால், அபிஷேக் பச்சன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஓரிரு வாரத்தில் இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் வெளிநாட்டுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.. அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.