Home இலங்கைதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…

தையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…

by admin

யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டது. தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது. குறித்த காணிகள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட போதும் இன்று காலையே காணி உரிமையாளர்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

தையிட்டி தெற்கில் j/ 249, j/250 இல் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியதால் நல்ல நிலையிலேயே உள்ளது. சில வீடுகளை திருத்தி மாற்றியுள்ளனர். அத்துடன் வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்று படங்களை புடைப்பு சிற்பங்களாக பயன்படுத்தி உள்ளனர். .

மேலும் காணியில் வளர்ந்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும் புத்தரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி , படங்கள் :- செல்வநாயகம் நிரூஜன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More