கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகின்ற நிலையில் இது தொடர்பாக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்த போதும் இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
ஆளுநர் மாளிகை நோக்கி இன்று காலை புறப்பட்டுச் சென்ற திமுக நிர்வாகிகள் ஆளுநர் மாளிகையை நெருங்கியபோது, காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து, அவர்களை தடுத்து நிறுத்தியதனையடுத்து அவர்கள் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.