மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் , நவோமி ஒசாகா மற்றும் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டியில் கிரீஸின் சிட்ஸிபசை எதிர்கொண்ட ரபேல் நடால் 6-2 , 6-4 , 6-0 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.நடால் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது பவுலி ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ளவுள்ளார்.
அதேவேளை பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று ஜப்பான் வீராங்களையான நவோமி ஒசாகாவும் பெட்ரா கிவிட்டோவாவும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது