அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ள நிலையில், அவரின் வருமான ஆதாரங்களை துண்டிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றியதனையடுத்து அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக வெனிசுவேலாவின் நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் வெனிசுவேலாவின் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் செய்திருந்தமையை அமெரிக்கா ஆதரித்துள்ளது. இது ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு கடும் சினத்தை ஏற்பத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது