பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவில், 225.31 ஏக்கர் நிலப்பரப்பில், ஹலோரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. இந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருவதனால் அவ்விடங்களின் காணிகளை கையளிக்கும் நிகழ்வு ஜனவரி மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாகப் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வேம்பொடுகேணியில் ஏ- 9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் பகுதியை அடுத்துள்ள மேலும் 300 மீற்றர் வரையான பகுதி விடுவிக்கப்படவுள்ளது.
முகமாலையில் ஏ- 9 வீதிக்குச் சமனான வடக்கு நோக்கி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் (அம்பளாவளை கிராமத்தின் ஒருபகுதி விடுவிக்கப்படவுள்ளது.
இத்தாவிலில் இத்தாவில் சந்தியிலிருந்து முருகையன் கோவிலுக்கு செல்லும் வீதிக்கு மேற்கு பக்கமாக ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ஏ- 9 வீதியிலிருந்து 200 மீற்றர் பகுதியைத் தொடர்ந்து மேலும் உயர் மின்வலு இதனால், மேற்கூறப்பட்ட இடங்களுக்குரியவர்கள் மீள் குடியேற்ற செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு மீள் குடியேற்றம் தொடர்பான பதிவுகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பச்சிலப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.