186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுமார் 70 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை தோட்டக் காணி ஒன்றில் உலர வைத்தநிலையில் மீட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய பருத்தித்துறை குரும்பசிட்டி பகுதியிலேயே இவ்வாறு இந்தக் கஞ்சா இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.
கஞ்சாவை உலர வைத்தவர்கள் யார் என்று அறியப்படாத நிலையில், தோட்டக் காணியின் உரிமையாளரான தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளா ர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Spread the love