பெங்களூரில் இன்று (01.02.19) பிற்பகல் இந்திய விடானப்படையின் மிராஜ் 2000 (Mirage 2000 aircraft of the Indian Air Force) விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமான பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக விமானத் துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஏச்.ஏ.எல், (HAL) நிறுவனத்தின் மிராஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் பெங்களூரிலுள்ள (HAL).ஏ.எல்.விமான நிலையத்தில் (HAL Airport) தரையிறங்கியபோது, தரையில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
விமானம் தரையில் வீழ்ந்து வெடித்ததுடன், பாரியளவில் தீப்பற்றிக்கொள்ள, தீயணைக்கும் படையினர் பெரும் சிரமத்தின் பின்னர் தீயைக் கட்டுப்படுத்தினர்.
கர்நாடகம், பெங்களூருவில் ஏச்.ஏ.எல் விமான நிலையம் அமைந்துள்ளதுடன், அங்கு ஏச்.ஏ.எல் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுபடுவது, வழமையாகும்.
இவ்வாறான ஒரு சோதனை நடவடிக்கையின் போதே, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இது குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.