ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 17-வது ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் கட்டார் அணி சாம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
கடந்த மாதம் 5ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் 24 அணிகள் போட்டியிட்ட நிலையில் ஜப்பானும், கட்டாரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது.
போட்டியின் முடிவில் கட்டார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சம்பியனான ஜப்பானை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. 63 வருட கால ஆசிய கிண்ண கால்பந்து வரலாற்றில் கட்டார் அணி கிண்ணத்தினைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பதுடன் இந்த வெற்றியின் மூலம் 2021-ம் ஆண்டில் நடக்கும் பிபா கிண்ண போட்டிக்கும் கட்டார் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது